30 November 2004

ஒரு பரிசோதனை முயற்சி

ஒரு பரிசோதனை முயற்சியாக hello உதவியுடன் இந்த பதிவைப் பதிக்கிறேன். படத்தை சொடுக்கினால் முழு அளவு படம் திரையில் விரியும். பதிவின் தரத்தை மேம்படுத்தும் இம்முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் நண்பர் காசி அவர்களுக்கு நன்றி.

முந்தைய பதிவுகள் அனைத்தும் அகலக்கற்றை கட்டுப்பாட்டை மனதில் கொண்டு அளவும் தரமும் குறைக்கப்பட்டு பதியப்பட்டவை. இந்தப் பரிசோதனை வெற்றியடைந்தால் இனி வரும் படங்களின் காட்சித் தெளிவு நன்றாக இருக்கும்.

Just a Test Posting Posted by Hello

29 November 2004

ஆழியார் அணை

ஆழியார்-வால்பாறை மலைப்பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து எடுத்த படம்

27 November 2004

மலர்க்கொத்து

இலைகளும் மொக்குகளும் இலவசம்

26 November 2004

காத்திருத்தல் - 01

வாழ்க்கையில் பலநேரம் பல காரணங்களுக்காக நாம் காத்திருக்கிறோம். விரும்பியோ விரும்பாமலோ. அப்படிப்பட்ட சில காத்திருத்தல்களை பதிவு செய்வது தான் இந்த காத்திருத்தல் தொடர். தொடர் என்றால் அடுத்தடுத்து படங்கள் வரும் என்றில்லை. தொடரின் அடுத்த படம் நாளையும் வரலாம்; நான்கு நாட்கள் கழித்தும் வரலாம்; நான்கு மாதம் கழித்தும் வரலாம்; ஆனால் இதே தலைப்புடன் வரும்.
இதே போல் வேறு சீரியல்களும் 'உலகத் தமிழ் வலைப்பதிவுகளில் முதன் முறையாக...ஃபர்ஸ்ட் நண்பா ஃபர்ஸ்ட்' போன்ற அறிவிப்புகள் ஏதுமின்றி அவ்வப்போது வரும்.

இன்றைய காத்திருத்தல்:பொள்ளாச்சி-வால்பாறை சாலை ரயில்வே கேட்டில். (offtrack-இல் ஒரு சந்தேகம்: பொன்னாட்சி என்பதுதான் பொள்ளாச்சி ஆயிற்றா?)

25 November 2004

வயலின் வரப்பு மாட்டுக்கு வரம்பு

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடிக்கும் லால்குடிக்கும் இடையில்
மழையின் கருணையில் மலர்ந்து சிரிக்கும் நெற்பயிர் பரப்பும்
பசுமை சூழலில் பஞ்சம் மறந்த பசுவும் நெஞ்சை அள்ளிய காட்சி.

24 November 2004

வாழ்க்கை பயணம்

கோவை புறநகர்ப் பகுதி

17 November 2004

ஒரு மாலைநேரக் காட்சி

ஒரு மாலைநேரக் காட்சி பாடல் சொல்லும்;
மலை,மேகம் எல்லாம் வாழ்த்துச் சொல்லும்;

நிலையான மலைமீது கலைந்தோடும் பனிமேகம்
நிறைவான மனம்கண்ட முறையான வாழ்வொக்கும்.

10 November 2004

தீபாவளி & ரம்ஜான் வாழ்த்துகள்

அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துகள். மீண்டும் அடுத்த வாரம் முதல் இன்னும் நிறைய புத்தம் புது படங்களுடன் (தீபாவளி எஃபக்ட்!)உங்களை சந்திக்கும் வரையில் வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.

காவல் தெய்வங்கள் - 07

08 November 2004

காவல் தெய்வங்கள் - 06

என்னதான் வண்ணம் தீட்டப்பட்டிருந்தாலும் அந்த பழைய குதிரை சிற்பங்களுக்கு உள்ள கம்பீரம் இங்கே சற்றுக் குறைவே.

02 November 2004

காவல் தெய்வங்கள் - 01

துறவுமேலழகர் கோயில் சிற்பங்களைத் தொடர்ந்து ஒரு வீரனார் கோயிலில் உள்ள சிற்பங்கள் ஏழு தொடர இருக்கின்றன. சிதைவுற்று, பராமரிப்பு குறைந்த நிலையிலும், வைரத்தாலும் தங்கத்தாலும் இழைக்கப் படாமலேயே இந்த சிற்பங்களில் தெய்வீகத்தைக் கண்டு வழிபடும் மக்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
கிராமத்து மக்களின் பாதுகாப்பு அரண்கள் இந்த தெய்வங்கள். அம்மக்களைப் போலவே மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, வாழ்க்கையின் ஆதார சக்தியான நம்பிக்கையை தாராளமாக வாரி வழங்கும் இந்தக் காவல் தெய்வங்களைக் காணும் போது 'மக்கள் எவ்வழி கடவுள் அவ்வழி' என்று தோன்றுகிறது.