28 September 2004

ரோஜாக்கூட்டம்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
ஏராளமாக செடி கொடிகள் - அங்கே
பூக்களுக்காக சில செடிகள் - உண்ணும்
காய்களுக்காக சில கொடிகள்.
சுவைத்து மகிழக் கனிகள் தரும்
மரங்கள் கூட பலவுண்டு; அங்கே
புல்லும் உண்டு; சுற்றித் திரியும்
புள்ளும் உண்டு.

தோட்டத்தின் ஓர் புறத்தில்
வாட்டமாக ஒரு ரோஜாக் கூட்டம்.
பச்சை நிறச் செடிகளில்
பூக்கும் மலர்களில் தான்
எத்தனை நிறங்கள்! எத்தனை விதங்கள்!

சற்று நேரம் நின்று பார்த்தால்
நினைக்கத்தோன்றும்:
இது ரோஜாத் தோட்டமல்ல;
மண்ணில் வாழும் மக்கள் கூட்டம்

25 September 2004

நெடுநீர் குட்டம்

புறநானூற்றில் உள்ள மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்று "யாண்டு உண்டுகொல்?" என்னும் பாடல். 243 வது பாடல். அதில் கீழ்கண்ட வரிகள் வரும்:

"நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை"

தொடித்தலை விழுத்தண்டினார் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தண்டூன்றி நடக்கும் போது இந்த பாடலைப் பாடியிருப்பாரோ?



22 September 2004

இன்று மலர்ந்த இரட்டை ரோஜாக்கள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இன்று காலை மலர்ந்த ரோஜாக்களில் இரண்டு.
TWIN_ROSES_02

21 September 2004

கங்கைகொண்ட சோழபுரம்

கோயிலின் தோற்றம்-தென் மேற்கு திசையில் உள்ள கணக்கவிநாயகர் கோயிலுக்கு செல்லும் வழியிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

19 September 2004

நடந்தாய் வாழி காவேரி

திருச்சி ஆற்று மணல்வெளியை ஈரப்படுத்திய காவேரி - மங்கிய மாலைப்பொழுதில்.
15 செப்டம்பர் 2004 அன்று எடுக்கப்பட்டது.

அழகர் கோயில் அருகே

கிராமத்து சாமிகளில் கூட வெள்ளை நிற சாமி தான் வெற்றி வீரன்!

18 September 2004

அழகர் கோயில் - 3

பழைய குதிரையும் புதிய குதிரையும்

15 September 2004

அழகர் கோயில் - 2

யானை சிற்பத்தின் வலது முன்னங்காலின் அடியில்

அழகர் கோயில் - 1

கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து சுமார் 5 கி.மீ. வடக்கே சென்றால் சலுப்பை என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள துறவு மேல் அழகர் கோயில் சுதை சிற்பங்கள் அளவில் பெரியவை. இந்த சிற்பங்கள் செங்கல்லின் மேல் பூசப்பட்ட சுண்ணாம்பு கலவையால் ஆனவை.நுணுக்கமான வேலைப்பாடுகளையும் கொண்டவை.

மேய்ச்சல்

ஆடுகளை மேயவிட்டு ஆழ்ந்த ஆலோசனையில் மேய்ப்பர்

13 September 2004

உணவு தேடும் தாயும் சேயும்




வளர்ச்சிப்பணி


தமிழகத்தில் வளர்ச்சிப்பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
முன்பெல்லாம் குழிகள் நிறைந்த சாலைகள் கவனிப்பாரற்று கிடந்தன.
இப்போதோ மாதா மாதம் குழிகள் தோண்டப்பட்டு, மூடப்பட்டு,
மீண்டும் தோண்டப்பட்டு மூடப்பட்டு வருகின்றன.
ஒரே வருத்தம்: மூடிய குழிகள் தோண்டப்படும் வேகம் சற்று அதிகம்.
ஆகவே சாலைகள் எப்போதும் குண்டும் குழியுமாக இருப்பதாகத்(!!) தோன்றுகிறது.

12 September 2004

வரவேற்பு வளைவு

இயற்கை தரும் இனிய வரவேற்பு
இடம்:பெரம்பலூர் மாவட்டத்தில்
ஜெயங்கொண்ட சோழபுரம் - கங்கைகொண்ட சோழபுரம் சாலை

பொன்னேரி

பொன்னேரி என்று எங்கள் பகுதி மக்களால் அழைக்கப்படும் இந்த ஏரிக்கு வரலாற்றுப் பெயர்: சோழகங்கம்.

தான் உருவாக்கும் தலைநகரில் காவேரி ஓடாத குறையைத் தீர்க்க,முதலாம் இராசேந்திர சோழன் கங்கையிலிருந்து கொண்டுவந்த தண்ணீரைக் கொண்டு உருவாக்கிய ஏரி.ஒரு காலத்தில் கடலைப்போன்று பரந்திருந்த ஏரி இன்று படத்தில் பார்ப்பதைப்போன்று கட்டாந்தரையாக உள்ளது.

வீராணமும் பொன்னேரியும் நிறைந்தால் இந்தப் பகுதி பொற்களஞ்சியமாகும்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார்.

11 September 2004

தொழிலிடைத் தூக்கம்

உண்ட களைப்பில் மதிய நேர சிறுதூக்கம் - சோழகங்கம் என்ற பொன்னேரிக்கரையில்

10 September 2004

ஒரு தமிழக கிராமத்தின் நுழைவாயில்


படத்தை உற்று நோக்கினால் இன்றைய தமிழகத்தின் பிரதிபலிப்பு போல இல்லை?

வேப்பங்கன்று

முளைச்சாச்சு; மூணு இலையும் விட்டாச்சு

01 September 2004

மயிலிறகு விசிறி

சின்ன வயதில் மயிலிறகு மேல் அதீத மோகம். அதை நோட்டுப்புத்தகத்தில் வைத்து தென்னை மட்டை அடியில் இருக்கும் சுனையை சுரண்டி அதோடு சேர்த்துவைத்தால் இன்னொரு மயிலிறகு குட்டி போடும் என்று சொன்னதை நம்பி பாதுகாப்பாக வைத்து தினம் தினம் பார்ப்போம். கடைசி வரை குட்டி போடவில்லை.ஏமாந்ததுதான் மிச்சம். :-)