02 November 2004

காவல் தெய்வங்கள் - 01

துறவுமேலழகர் கோயில் சிற்பங்களைத் தொடர்ந்து ஒரு வீரனார் கோயிலில் உள்ள சிற்பங்கள் ஏழு தொடர இருக்கின்றன. சிதைவுற்று, பராமரிப்பு குறைந்த நிலையிலும், வைரத்தாலும் தங்கத்தாலும் இழைக்கப் படாமலேயே இந்த சிற்பங்களில் தெய்வீகத்தைக் கண்டு வழிபடும் மக்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
கிராமத்து மக்களின் பாதுகாப்பு அரண்கள் இந்த தெய்வங்கள். அம்மக்களைப் போலவே மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, வாழ்க்கையின் ஆதார சக்தியான நம்பிக்கையை தாராளமாக வாரி வழங்கும் இந்தக் காவல் தெய்வங்களைக் காணும் போது 'மக்கள் எவ்வழி கடவுள் அவ்வழி' என்று தோன்றுகிறது.

No comments: