21 March 2005

கல்லாறு காட்சிகள் - 11

கல்லாறு காட்சிகள் - 10 இல் பதியப்பட்டுள்ள படம் பப்ளிமாஸ் மரம். இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது நாகலிங்க மரத்தின் ஒரு பகுதி.

கல்லாறு மேட்டுப்பாளையம் - ஊட்டி பாதையில் மலைப்பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ள ஊர். நாங்கள் இங்கு சென்றபோது, கல்லும் நீரும் கலந்து கிடக்கும் ஒரு சிறிய ஓடையைக் காட்டி இது தான் கல்லாறு என்றனர். கல்லோடை என்பதுதான் பொருத்தம். இருப்பினும், அமைதியான சூழலில் கற்பாறைகளில் மோதி சலசலத்துச் செல்லும் நீரின் இரைச்சல் நம்மை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்குள்ள அரசு பழத்தோட்டம் ஒரு நல்ல பிக்னிக் ஸ்பாட். ஆனால் சரியான பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது. சுற்றுலாத் துறையும் தோட்டக்கலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கல்லாறு 'ஒருநாள் சுற்றுலா'வுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.

4 comments:

Anonymous said...

அருமை! வன்னஙள் அற்புதமாக வந்திருக்கிறது! Color composition and lights are excellent...
Could you please also add some details about the time of the day (evening/morning), camera details...தொடரட்டும் இந்த சேவை!

Thangamani said...

nalla padam. nandri

Anonymous said...

அழகு!

--பாண்டி

jeevagv said...

வாவ், நான் இதற்கு முன் இப்பூவைப் பார்த்ததே இல்லையே!
குறையத்தீர்த்தீர், நன்றி.