21 August 2004

சிரவணபெலகொலா


இடம்: சிரவணபெலகொலா.---வெள்ளை குளத்து முனிவர் (பெல கொளத்து சிராவணர்!) என்று பொருளாம்.----
சந்திரகுப்த மௌரியர் பரந்த பேரரசை துறந்து தனது சமண சமய குருவுடன்(பகவான் பத்ரபாகு) இதில் தெரியும் மலையில்தான் தனது இறுதி காலத்தைக் கழித்தார். அதனால் இந்த குன்று சந்திரகிரி என்று அழைக்கப்படுகிறது.தென்னிந்தியாவில் சமணத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்ட இடம்.

மலையுச்சியில் நிற்கும்போது தென்றல் உடலை வருட, 2500 ஆண்டுகால வரலாறு மனதில் உருண்டது. உணர்வலைகள் அதிர்ந்தன. சலனம் குறைந்து மௌனம் நிறைந்தது. வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.

இங்கு எடுத்த இன்னும் சில படங்கள் தொடர்ந்து வரும்.

2 comments:

Kasi Arumugam said...

பாலா,

'சிரவணபெலகோவா'

பெயர் சரியா? எனக்கு என்னவோ கடைசி ரெண்டு எழுத்தில் ஒரு சந்தேகம்....
(அப்புறம், குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்துக்கள், முதலிலேயே சொல்ல மறந்துவிட்டது.)

BALA said...

வாழ்த்துக்கு நன்றிங்க காசி.
பெயரில் எழுத்துப்பிழை. சரியாகச் சொன்னால் அச்சுப்பிழை.
திருத்திவிட்டேன். நன்றி.