காத்திருத்தல் - 01
வாழ்க்கையில் பலநேரம் பல காரணங்களுக்காக நாம் காத்திருக்கிறோம். விரும்பியோ விரும்பாமலோ. அப்படிப்பட்ட சில காத்திருத்தல்களை பதிவு செய்வது தான் இந்த காத்திருத்தல் தொடர். தொடர் என்றால் அடுத்தடுத்து படங்கள் வரும் என்றில்லை. தொடரின் அடுத்த படம் நாளையும் வரலாம்; நான்கு நாட்கள் கழித்தும் வரலாம்; நான்கு மாதம் கழித்தும் வரலாம்; ஆனால் இதே தலைப்புடன் வரும்.
இதே போல் வேறு சீரியல்களும் 'உலகத் தமிழ் வலைப்பதிவுகளில் முதன் முறையாக...ஃபர்ஸ்ட் நண்பா ஃபர்ஸ்ட்' போன்ற அறிவிப்புகள் ஏதுமின்றி அவ்வப்போது வரும்.
இன்றைய காத்திருத்தல்:பொள்ளாச்சி-வால்பாறை சாலை ரயில்வே கேட்டில். (offtrack-இல் ஒரு சந்தேகம்: பொன்னாட்சி என்பதுதான் பொள்ளாச்சி ஆயிற்றா?)
2 comments:
//'உலகத் தமிழ் வலைப்பதிவுகளில் முதன் முறையாக...ஃபர்ஸ்ட் நண்பா ஃபர்ஸ்ட்' போன்ற அறிவிப்புகள் ஏதுமின்றி அவ்வப்போது வரும்.//
:-))
எங்க தமிழாசிரியர், 'பொழிலாட்சி என்பதுதான் பொள்ளாச்சி ஆச்'சென்றார், தமிழாசிரியர்கள் உயர்வு நவிற்சி தெரியும்தானே. ஆகவே உண்மையா இல்லையா தெரியாது.
-பொள்ளாச்சிக்காரன். (பக்கத்து சித்தூர்க்காரன்)
காசியின் தமிழாசிரியர் சொன்னதை எங்க 'சயன்ஸ்' டீச்சர் சொன்னாங்க. :-)
- இன்னொரு பொள்ளாச்சிக்காரன்.
Post a Comment