வானம் தீட்டிய வண்ணப்படங்கள்
இன்று மாலை கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி சென்றிருந்தேன். செல்லும் வழியில் எடுத்த படங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். ஒரு மணி நேரத்தில் வானம் காட்டிய வர்ணஜாலங்கள் பாருங்கள். பாரதி சொன்னதுபோல,
"ஆகா, என்ன வர்ணங்கள்! எத்தனைவித வடிவங்கள்! எத்தனை ஆயிரவிதமான கலப்புகள்!...நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனைவிதச் செம்மை! எத்தனைவகைப் பசுமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்!தங்கத் திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக்களஞ்சியம். போ போ, என்னால் அதை வர்ணிக்கமுடியாது"